மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
27-Mar-2025
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் பகுதிகளில், கேரளா லாட்டரி விற்பதாக கிடைத்த தகவலின்படி, பங்களாபுதுார் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கள்ளிப்பட்டியில் ஆறுமுக கவுண்டர் வீதியில் வெங்கடேஷ், 43, என்பவர் ஆன்லைனில் கேரள லாட்டரியை விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.இதேபோல் கொங்கர்பாளையம் பாரதி வீதியில் பழனிச்சாமி, 71; அரக்கன்கோட்டையில், சத்தி - அத்தாணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, 66, ஆகியோரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
27-Mar-2025