உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது

தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது

பவானி, அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை, சொட்டையனுாரை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 70; தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.பல்சர் பைக்கில் வந்த மூவர், தோட்டத்தில் பதிக்கப்பட்டிருந்த சொட்டு நீர் குழாய்களை வெட்டி எடுத்து தப்ப முயன்றனர். இதைப்பார்த்த குப்புசாமி சத்தமிடவே ஓடினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்தியூர் அருகே ஒலகடம், தாண்டாம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன், 27, வினோத்குமார், 23, மற்றும் கோவிந்தராஜ், 26, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி