விபத்தில் மூவர் படுகாயம்
கோபி, நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ், 63, கூலி தொழிலாளி; மனைவி பூவத்தாள், 55, தங்கை காளியம்மாள், 58, ஆகியோருடன், டி.வி.எஸ்., எக்சல் மொபெட்டில், கோபி அருகே மதிப்பனுார் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சென்றார். எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.