உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதி மூவருக்கு கால் முறிவு

ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதி மூவருக்கு கால் முறிவு

காங்கேயம்::காங்கேயம் அருகேயுள்ள நத்தகாடையூரை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 25, சுபாஷ், 27, விவேக், 22; மூவரும் காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.நத்தகாடையூர்-பழையகோட்டை சாலையில் சென்றபோது, ஈரோடு சாலையில் எதிரே வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த மூன்று பேருக்கும் கால் முறிந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ