உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

அந்தியூர்: அகில இந்திய அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் வனவிலங்கு சரணால-யத்தில், கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை என நான்கு வனச்சரகங்களில் நடக்கும் பணியில், 150 க்கும் மேற்பட்ட வனத்துறை களப்பணியாளர் ஈடுபட்டுள்ளனர். முதல் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை முறையில் நடக்கும். அடுத்த மூன்று நாட்கள் பெரிய தாவர உண்ணி அடிப்படையில் நடக்கும். வரும், 11ம் தேதி இப்பணி நிறைவு பெறுகிறது. 12-ம் தேதி கணக்கெடுக்-கப்பட்ட வன விலங்குகள் குறித்து பட்டியலப்படும் என்று வனத்-துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ