உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பசுமை ஆடை மையமாக திகழும் திருப்பூர்

பசுமை ஆடை மையமாக திகழும் திருப்பூர்

திருப்பூர், உலகளாவிய பொறுப் பான அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி (டபுள்யூ ஆர்.ஏ. பி.,) குறித்த கருத்தரங்கம் திருப்பூரில் நேற்று நடந்தது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வணிக மேம்பாடு மற்றும் பிராண்டிங் நிலைத்தன்மை துணை குழு தலைவர் ஆனந்த் வரவேற்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது: வணிக மேம்பாடு, பிராண்டிங் மற்றும் நிலைத்தன்மை குழுவின் முயற்சிகளுக்கு பாராட்டுகள். திருப்பூர் கிளஸ்டர் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகத்தில்(இ.எஸ்.ஜி.,) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இது உலகளவில் ஒரு தனித்துவமான கிளஸ்டராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், பசுமை ஆடை மையம் என்று குறிப்பிடப்படுகிறது.இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கிளஸ்டர் தற்போது காற்றாலை மற்றும் சூரிய சக்தியிலிருந்து, 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்கிறது. ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில், தினமும், 13 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. இந்த கூட்டு முயற்சிகள் திருப்பூரில் நிலைத்தன்மையை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அதிகளவில் சர்வதேச ஆர்டர்களையும் ஈர்க்க உதவுகின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஏற்கனவே, ப்ளூசைன், கிரீன் ஸ்டோரி, பேர்டிரேடு மற்றும் ரிவர்ஸ் ரிசோர்சஸ் போன்ற உலகளாவிய நிலைத்தன்மை தளங்களுடன் பணியாற்றி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை