தக்காளி விலை சரிந்தது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை வெகுவாக அதிகரித்தது. கிலோ ரூ.65 வரை விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தக்காளியின் விலை வெகுவாக குறைந்தது. நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ, 15 ரூபாய் முதல் ௩0 ரூபாய் வரை விற்றது.மார்க்கெட்டில் பிற காய்கறிகளின் விலை விபரம்: சேனை, கருணை கிழங்கு கிலோ தலா80 ரூபாய், கேரட்100, சின்ன வெங்காயம்70, பெரிய வெங்காயம்80, பட்ட அவரை80, முருங்கை80, பச்சை மிளகாய்45, பீர்க்கங்காய்70, பீன்ஸ்70, உருளை கிழங்கு55, முள்ளங்கி50, கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் தலா40 ரூபாய்க்கு விற்றது.பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தைவிரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்புஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அதுவும் ஈரோடு மாநகரில் ஒரே ஒரு பைக் ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பைக் ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை பரவலாக அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மலைப்பகுதி கிராமங்களில் மருத்துவ சேவை செய்ய, பைக் ஆம்புலன்ஸ்சை அதிகம் இயக்க வேண்டும். சிறு உடல் உபாதைகளுக்கு கூட வனப்பகுதி, இயற்கை பேரிடர் காலங்களில் நகர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் பர்கூர், தாளவாடி, கடம்பூர், ஆசனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.