உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்

நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு: நம்பியூர், கெட்டிசெவியூரில் உள்ள ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன யூனிட்-1ல் உள்ள, கருத்தரங்க கூடத்தில் நாளை (27ம் தேதி) தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ., சார்பில், 'நிதி ஆப்கே நிகட் - பி.எப்., உங்கள் அருகில்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், இ.பி.எப்., ஓய்வூதியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்கள் குறைகள் தொடர்பான விபரங்கள், ஆவணங்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறலாம்.தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன ஈரோடு மாவட்ட அமலாக்க அலுவலகம் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை