மேலும் செய்திகள்
104 டிகிரி வெயில் பதிவு
17-Apr-2026
ஈரோடு :ஈரோட்டில் வெயிலின் தாக்கம், 104 டிகிரி வரை கொளுத்துகிறது. இந்நிலையில் மாநகரில் மழை வேண்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு யாகம் நாளை இரவு நடத்தப்பட உள்ளது. நுாறு வகையான மலர்களால் கஸ்துாரி அரங்கநாதருக்கு புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ளலாம்.104 டிகிரி வெயில்ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் கடுமையான வெயில் வாட்டியது. அவ்வப்போது லேசான மேகமூட்டம் தென்பட்டது. இருப்பினும் கடும் அனல் காற்று வீசியதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மதியம் அதிகபட்சமாக, 104 டிகிரியாக வெயில் வாட்டியது.
17-Apr-2026