உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை

கோபி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளுக்கு நான்காம் நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை பகுதியில் கடந்த, 18ல், 43 மி.மீ., மழை, 19ல், 88.40 மி.மீ., மழை பெய்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த, 19ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணைக்குள், சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த, 20ல், 13.20 மி.மீ., மழை பெய்ததாலும், பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பாலும், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மூன்றாம் நாளான நேற்று முன்தினமும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 8,500 கன அடி உபரிநீருடன், மழைநீரும் சேர்ந்து மொத்தம், 9,567 கன அடி நீர் வெளியேறியதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதியம் 3:00 மணிக்கு உபரிநீர் மற்றும் மழைநீர் உட்பட வினாடிக்கு, 11 ஆயிரத்து 167 கன அடி நீர் தடுப்பணை வழியாக வெளியேறியது. இதனால் கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும், நான்காம் நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை