உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் சிக்கிய டிராக்டர்: பெண் தொழிலாளி சாவு

விபத்தில் சிக்கிய டிராக்டர்: பெண் தொழிலாளி சாவு

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிசாம்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையன், 48; விவசாய நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் மாலை தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த மாரியாயி, 54, செல்வி, 50, ஆகியோருடன் முத்தையன் டிராக்டரில் சென்றார்.அப்போது மண் திட்டில் முன் சக்கரம் ஏறியதில், முன்புறம் மேலே துாக்கியதில், மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர். மூவரும் செம்புளிச்சாம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மாரியாயி இறந்தார். சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை