உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் தாலுகா அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் இணைந்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும், தமிழக அரசை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தலைமையில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த, 14 ஆண்டுகளாக உயர்த்தாத ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும். பர்மிட் இல்லாத பைக் டாக்சியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சி.என்.ஜி., பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ