உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெற்றி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ. மற்றும் கியூட் தேர்வு பயிற்சி வகுப்பு துவங்கியது.அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் நீட், ஜே.இ.இ. மற்றும் க்யூட் போன்ற உயர் கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ள, அரசு சார்பில் பயிற்சி வகுப்பு எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களிலும் தலா ஒன்று அல்லது இரு பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை பயிற்சி வழங்கப்படும். ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில், 163 மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பு ஆசிரியை அஜிதா முன்னிலையில் வகுப்பு நடந்தது. ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை