உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வழிகாட்டி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

வழிகாட்டி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஈரோடு:ஈரோட்டில், உயர்கல்வி வழிகாட்டுவது குறித்து முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி துவக்கி வைத்தார். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர் அன்பரசு பங்கேற்று, முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புக்கு பிறகு மாணவ-,மாணவிகளுக்கான உயர்கல்வி வாய்ப்பு, அதன் விழிப்புணர்வு, அரசு சார்ந்த போட்டி தேர்வு, கல்வி ஊக்கத்தொகை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10ம் வகுப்புக்கு பிறகு மாணவ, -மாணவிகளுக்கு மேல்நிலை வகுப்பில் உள்ள பாட வகைகள், குரூப் விவரம், அதன் மூலம் அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட ஆசிரியை, ஆசிரியர்கள், அவர்களது பள்ளிகளில் உள்ள மாணவ, -மாணவி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை