மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் இடமாற்றம்
05-Feb-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் டிரைவர்களை, பணியிட மாற்றம் செய்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தா.முகமது குதுரத்துல்லா உத்தரவிட்டார்.இதன்படி ஈரோடு டி.ஆர்.ஓ., டிரைவர் எஸ்.பிரகாசம் - ஈரோடு ஆர்.டி.ஓ., டிரைவராகவும், அங்கு பணியாற்றிய பழனிசாமி, டி.ஆர்.ஓ., டிரைவராக மாற்றப்பட்டார். மாவட்ட வழங்கல் அதிகாரி டிரைவர் குமார், கோபி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கும், அங்கு பணி செய்த சிவாச்சலபதி, பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டார். பெருந்துறை தாலுகா அலுவலக குமார், கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கும், அங்கு பணியாற்றிய லாரன்ஸ், ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டார்.ஈரோடு தாலுகா அலுவலக பாபு, ஈரோடு பறக்கும் படை தனி தாசில்தார் அலுவலகத்துக்கும், அங்கு பணி செய்த அய்யாசாமி, மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டார். சத்தி தாலுகா அலுவலக செந்தில்குமார், கோபி தாலுகா அலுவலகத்துக்கும், அங்கு பணி செய்த மகாதேவன், சத்தி தாலுகா அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டார்.
05-Feb-2025