நெடுஞ்சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மர் மாற்றம்
அந்தியூர், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பாலம் அருகில், அத்தாணி செல்லும் வழியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது, டிரான்ஸ்பார்மர் நெடுஞ்சாலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் டிரான்பார்மரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியது. டிரான்ஸ்பார்மரை மாற்ற நான்கு மாதங்களுக்கு முன் மின்வாரிய நிர்வாகத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மூன்று லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, பாலம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை, 15 அடி துாரத்துக்கு இடது பக்கம் நகர்த்தி வைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனால் தவிட்டுப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை, 9:௦௦ மணி முதல், மாலை, 6:௦௦ மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.