மேலும் செய்திகள்
பேராசிரியையான கர்நாடகாவின் முதல் திருநங்கை
23-Dec-2024
ஈரோடு, டிச. 24-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திருநங்கைகள் சிம்ரன், ஜோஸ்னா, பிரியா, ஜான்வி, சுஜிதா உட்பட பலர் மனு வழங்கி கூறியதாவது:திருநங்கைகளாக உள்ளதால், எங்களுக்கு வாடகைக்கு வீடு வழங்க யாரும் தயாராக இல்லை. எனவே, வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பின்றி குடிசை அமைத்து வசிக்கிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுடன், வீடு கட்டித்தர வேண்டும்.திருநங்கைகளுக்கு சுய தொழில் கடன் வழங்கப்படும், என அரசு அறிவிக்கிறது. நாங்களும் பல முறை மனு வழங்கியும் கடன் தரப்படவில்லை. சுய தொழில் இல்லாததால்தான் கிடைக்கும் பணிகளை செய்து சிரமப்படுகிறோம். தொழில் கடன் தர வேண்டும். நாமக்கல், திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு தொழில் கடனும், தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமும் வழங்கப்படுகிறது. அதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.
23-Dec-2024