எஸ்.பி., ஆபீசில் திருநங்கைகள் தர்ணா
ஈரோடு:தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த திருநங்கைகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் நேற்று காலை, 7:00 மணியளவில் திரண்டனர். வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மனுவை பெற்றனர். மனு விபரம்:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூத்த திருநங்கை விஜியா மறைந்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த திருநங்கைகள் பதவி ஏற்பு விழா ஈரோடு அருகே கடந்த 30, 31ல் நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.சென்னை, பெங்களூரு திருநங்கைகள் தரக்குறைவாக நடந்து கொண்டனர். புதிதாக பதவியேற்ற திருநங்கை ராதிகா, அவரது ஆதரவாளர்கள் எங்களை மிரட்டி அவமரியாதை செய்தனர். எங்களுக்கு இந்த பதவியேற்பில் விருப்பமில்லை. ராதிகா பதவி வகிக்க விரும்பவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை அடித்தவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.காலை, 10:00 மணி வரை தர்ணா நீடித்தது. இருதரப்பையும் சேர்ந்த தலா ஐந்து பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர்.