போக்குவரத்து ஓய்வூதியர் மாநில பேரவை கூட்டம்
நம்பியூர், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் நலச்சங்கத்தின், மாநில அளவிலான சிறப்பு பேரவை கூட்டம், நம்பியூரில் நடந்தது. மண்டல தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிவகுமார், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் பூபதிமணி, துணை தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நிதி கட்டுப்பாட்டாளர் சிங்காரம் கலந்து கொண்டார். ஓய்வூதியர்களுக்கு இன்னும் வழங்க வேண்டிய, 40 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாநில பொது செயலாளர் ராஜாராம், மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் குருநாதன், துணை பொது செயலாளர் சந்திரசேகர், நலச்சங்க பொது செயலாளர் சண்முக வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.