மேலும் செய்திகள்
போக்குவரத்து ஊழியர் ஆண்டு பேரவை கூட்டம்
30-Jul-2025
ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். மண்டல தலைவர் த.மு.இளங்கோ தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெகநாதன் முருகையா, ஜான்சன் கென்னடி, ஸ்ரீதர் உட்பட பலர் பேசினர். சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ் முழுமையாக வழங்க வலியுறுத்தினர். ஓய்வூதியர்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
30-Jul-2025