உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது

பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது

கோபி:பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே கூலைமூப்பனுார் மாரியம்மன் கோவிலில், மது போதையில் படுத்திருந்த ஆசாமியிடம், சந்தேகத்தின் அடிப்ப-டையில் சிறுவலுார் போலீசார் நேற்று விசாரித்தனர். கோபி அருகே கலிங்கியத்தில் ஒரு பேக்கரியில் திருடியதாக கூறவே, கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோபி போலீசார் விசாரணையில், கோபி அருகே ஓடத்துறையை சேர்ந்த கவின், 25, என தெரிந்தது. கலிங்கியத்தில் பசீர் என்ப-வரின் பேக்கரி பூட்டை உடைத்து, 2,500 ரூபாயை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து பைக், 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கவின் ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எட்டு திருட்டு வழக்கில் கைதானவர் என்பதும் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ