உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெற முடியாமல் அவதி

கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெற முடியாமல் அவதி

புன்செய்புளியம்பட்டி:கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் இல்லாததால், பயிர் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புன்செய் புளியம்பட்டி அருகே நல்லுாரில், கோபி நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது இதில், 1,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். செயலராக பணிபுரிந்த தனலட்சுமி, பணி ஓய்வு பெற்ற நிலையில், ஆறு மாதத்துக்கு மேலாக பணியிடம் காலியாக உள்ளது.கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் நொச்சிக்குட்டை கூட்டுறவு சங்க செயலரும் சரியாக வருவதில்லை. இதனால் ரேஷன் கடை பணியாளர்களை வைத்து செயல்படுவதாகவும், இதனால் பயிர் கடன் பெற முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும், விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பயிர் கடன் பெற முடியாததால், சாகுபடி செய்த பயிர்களுக்கு, உரம் இடுபொருள் வாங்குவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக செயலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை