உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிவேகமாக சென்றதால் குவாரி லாரி சிறைபிடிப்பு

அதிவேகமாக சென்றதால் குவாரி லாரி சிறைபிடிப்பு

சென்னிமலை:சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட மயிலாடி, அஞ்சுராம்பாளையம் மற்றும் முருங்கத்தொழுவு கிராமங்களுக்கு மத்தியில், 80 ஏக்கர் பரப்பளவில் தனியார் குவாரி, கிரஷர், எம்.-சாண்ட் தயாரிக்கும் ஆலை மற்றும் புதியதாக தார் பிளாண்ட் இயங்கி வருகிறது.இதனால் இங்கிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான கனரக லாரிகள் முருங்கத்தொழுவு, மயிலாடி, அஞ்சுராம்பாளையம் வழியாக இயக்கப்படுகின்றன.லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அதிவேகமாக செல்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மயிலாடி வழியாக நேற்று சென்ற ஒரு குவாரி லாரி, மக்கள் மீது மோதுவது போல் சென்றதால் சிறைபிடித்துள்ளனர். தகவலறிந்து வந்த நிறுவன உரிமையாளரும் அலட்சியமாக பதில் அளித்தாராம்.சென்னிமலை எஸ்.ஐ., சுரேஷ் தலைமையிலான போலீசார், மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் லாரிகள் அதிவேகமாக செல்லாது என்று உறுதி கூறவே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை