உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

விசைத்தறி தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சுப்ரமணி வீதியை சேர்ந்தவர் பெரிய கருப்புசாமி, 30, விசைத்தறி தொழிலாளி. தாய், சகோதரியுடன் வசிக்கிறார். ஆறு மாதமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். கடந்த, 30ல் வீட்டில் இருந்தார். மற்றொரு சகோதரி மகள் ஹேமலதாவின் கணவர் தாமோதரன், என்னிடம் சொல்லாமல் மனைவி திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டாள். தாய் மாமன் என்ற முறையில் நீ ஏன் கேட்கவில்லை என்று கூறி வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அன்று மாலை தேவா என்பவருடன் வந்த தாமோதரன், தகாத வார்த்தை பேசியுள்ளார். தேவா பிடித்து கொள்ள பெரிய கருப்புசாமியை கட்டையால் தாமோதரன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்தவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். அவரது புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை