மது பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது
மது பாட்டில் விற்பனைக்குவைத்திருந்த இருவர் கைதுகோபி, நவ. 1-சட்ட விரோதமாக, மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், ஆசனுார், அந்தியூர் பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்தியூரை சேர்ந்த பிரகாஷ், 40, திருப்பூரை சேர்ந்த லட்சுமணன், 30, ஆகியோர் சட்ட விரோதமாக, 28 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.