உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருடிய ஆட்டை சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது

திருடிய ஆட்டை சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது

டி.என்.பாளையம், டி.ன்.பாளையம் அருகேயுள்ள ஏளூர்மேட்டை சேர்ந்தவர் லட்சுமி, 45; இவர் வளர்த்து வரும் ஒரு வெள்ளாடு கடந்த, 6ம் தேதி மாயமானது. மொடச்சூர் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று நினைத்த லட்சுமி, உறவினர்கள் சிலரை அழைத்து கொண்டு சந்தைக்கு சென்றார். அவர் எதிர்பார்த்தது போலவே, லட்சுமியின் வெள்ளாட்டை விற்பனைக்கு கொண்டு வந்த இருவரை அவருடன் சென்றவர்கள் சுற்றி வளைத்தனர். விசாரணையில் சிறுவலுார், மணியகாரன்புதுார், எம்.ஜி.ஆர்.,நகர் தேவராஜ், 25; காசிபாளையம், மணியகாரன்பாளையம் யுவராஜ், 35, என தெரிந்தது. இருவரையும் பங்களாபுதுார் போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை