உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு பாட்டிகள் மாயம்

இரு பாட்டிகள் மாயம்

ஈரோடு, ஈரோடு, பழைய கரூர் சாலையில் வசிப்பவர் முகம்மது மக்கி, 21; திருமணமாகி விட்டது. இவரது தாயார் கைருநிஷா, 58; மகனுடன் வசிக்கிறார். சற்று மனநிலை பாதித்தவர் என தெரிகிறது. கடந்த, 21ல் வீட்டு வெளியே இருந்த பாத்ரூமுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். * ஈரோடு அருகே சோலாரை சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது தாயார் மலையம்மா, 85; வயது முதிர்வால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ