உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்

பக்தர் வேடமிட்டு நகை பறித்த இருவர் சிக்கினர்

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள தச்சு பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 35; விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்று விட்ட நிலையில் மனைவி ரேணுகா, 29, வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது ஐயப்ப பக்தர்கள் போல் மாலை அணிந்து டூவீலரில் இருவர் வந்துள்ளனர். பூஜை செய்ய நன்கொடை கேட்டுள்ளனர். வீட்டுக்குள் சென்று பணம் எடுத்து வந்த ரேணுகா முகத்தில் பொடியை துாவி, அரை பவுன் கம்மலை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் காவிலிபாளையம் பகுதியில் மொபட்டில், மாலை அணிந்து வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். டி.ஜி.புதுாரை சேர்ந்த மோகன், 42, மூர்த்தி, 41, என தெரிந்தது. இருவரும் ரேணுகாவிடம் கம்மலை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார் நகையை கைப்பற்றினர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை