உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிட் லாரியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி பலி

ஆசிட் லாரியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி பலி

பவானி: ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர்.ஐதராபாத்தில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு டையிங் தொழிற்சாலைக்கு, அலுமினியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்தது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த கந்தராஜா, 48, ஓட்டி வந்தார்.ஈரோடு மாவட்டம், பவானி, கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டூரை சேர்ந்தவர் யுகானந்தன், 50. இவருக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷனில், லாரியை சுத்தம் செய்ய, நேற்று காலை, 9:30 மணிக்கு வந்தார். சுத்தப்படுத்தும் பணியில் செல்லப்பன், 50, ஈடுபட்டார்.வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் உரிமையாளர் யுகானந்தன், சந்திரன், 62, ஆகியோர் லாரி மீது அமர்ந்திருந்தனர். டேங்கருக்குள் இறங்கிய செல்லப்பன் நீண்ட நேரமாக எதுவும் கேட்காததால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் டேங்கர் மீது அமர்ந்திருந்த இருவரும், டேங்கருக்குள் இறங்கியதில், இருவரும் மயங்கினர்.பவானி தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், யுகானந்தன், செல்லப்பன் விஷவாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது. சந்திரன் உயிர் பிழைத்தார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ