உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழங்குற்றவாளிகள் இரண்டு பேர் கைது

பழங்குற்றவாளிகள் இரண்டு பேர் கைது

ஈரோடு, சிவகிரி, கொடுமுடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகநாதன், 37; கட்டுமான பணிக்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தென்றல் நகர் பாலம் அருகே, கான்கிரீட் அமைக்க தேவையான ஷீட்களை வைத்திருந்தார்.இதில் மூன்று ஷீட்கள் திருட்டு போனது. இதன் மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய். புகாரின்படி விசாரித்த வீரப்பன்சத்திரம் போலீசார், வீரப்பன்சத்திரம் சந்தோஷ்குமார், 24; மாணிக்கம்பாளையம் பெரிய சேமூர் சுதாகரை, 25, கைது செய்தனர். விசாரித்ததில் இருவரும் பழங்குற்றவாளிகள் என போலீசாருக்கு தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ