ஊ.வ.,துறையினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட செயலர் ரவிசந்திரன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.வளர்ச்சி துறையில் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிங்கள், ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் . கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறப்பு படியை உயர்த்தி வழங்க வேண்டு என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.