உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதயநிதி அண்ணா எங்க ஊருக்கு வாங்க கோபி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை உருக்கம்

உதயநிதி அண்ணா எங்க ஊருக்கு வாங்க கோபி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை உருக்கம்

ஈரோடு: 'டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்-கேற்ற தேசிய, சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டி-களில் தங்கம் வென்ற, கோபியை சேர்ந்த வீராங்-கனை ஸ்நேகா பேசியதாவது:கோபி, கரட்டடிபாளையத்தில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றேன். ஆதிதிராவிட பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிராவில் இருந்து இங்கு வந்தோம். 30 ஆண்டுக்கு முன் நாங்கள் வசிக்க, குக்கிராமத்தில் ஒரு இடம் வழங்கினர்.தெருக்கூத்து, கம்பம் கட்டி ஆடுதல் எங்கள் தொழில். எங்கள் இனத்தில் பி.காம்., பட்டம் பெற்-றது நான் மட்டுமே. படித்த பின் என்ன செய்வ-தென தெரியவில்லை. எனது பயிற்சியாளர் முயற்சியில் கொல்கத்தாவில் ஜிம்னாஸ்டிக் டிப்-ளமோ படிக்க முயன்று தேர்வானேன்.ஆனால், 2.25 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறினர். அதேநேரம்தான் கரட்டடிபாளையத்தில் ஜிம்னாஸ்டிக் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. எனது பிரச்னையை துணை முதல்வர் உதயநிதியிடம் தெரிவித்தனர். அவரே, 2.25 லட்சம் ரூபாயை செலுத்தி என்னை படிக்க வைத்தார். எங்கள் சமூ-கத்தில் மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது. ஆனால், துணை முதல்வரால் வெளியே சென்று படித்து, இங்கு நிற்கிறேன். மாநில போட்டியில், 1 லட்சம் ரூபாயை ரொக்கப்-பரிசு வென்றேன். எனது தந்தை யோசனைப்படி எங்கள் ஊருக்கே விருந்து வைத்தேன். உதயநிதி அண்ணா, கட்டாயமாக நீங்கள் எங்கள் ஊருக்கும், ஸ்டேடியத்துக்கும் வர வேண்டும். இவ்வாறு பேசினார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, ''ஜிம்-னாஸ்டிக் மையத்துக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்-டுக்கும் சாப்பிடும்படி வருவேன்'' என்றார்.ஆசிய கோப்பை போட்டியில், 100 மீட்டர் ஓட்-டத்தில் வெற்றி பெற்ற வீராங்கனை நித்யா ராமராஜ் பேசியதாவது: நானும் விளையாட்டு விடுதியில் தங்கி படித்து, விளையாட்டு ஒதுக்-கீட்டில் கல்லுாரியில் படித்தேன்.முதல்வர் கோப்பை போட்டியில் வென்று, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் வென்றேன். தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள், 12 லட்சம் ரூபாய் வரை உபகரணங்கள், பயண செலவு, போட்டிகளில் பங்கேற்கும் செலவு, பயிற்சிக்கான பணத்தை பெறலாம். விளையாட்டில் சிறப்பான இடத்தை பெற்றால், படிப்புடன் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை