உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

ஈரோடு, ஈரோடு, செல்வம் நகர் வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது:ஈரோடு செல்வம் நகர் கிழக்கு, மேற்கு பகுதியில், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. செல்வம் நகர் கிழக்கு ஐந்தாவது வீதி பகுதியில் கீழ்பவானி நிலவியல் மற்றும் வாய்க்கால் செல்கிறது. இப்பகுதி வீட்டுமனை கழிவு நீர், பாதாள சாக்கடை திட்டத்தில் இணைத்து, செல்வம் நகர் கிழக்கு பகுதியில் கீழ்பவானி வாய்கால் வழியாக வெளியேற்ற திட்டம் வகுத்தனர். அங்கு சில தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதால், பாதாள சாக்கடை சேம்பர் தொட்டியில் இருந்து திறந்தவெளி சாக்கடையில் இணைத்துள்ளனர். இதனால் மழை பெய்யும்போது மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. இதுபற்றி தொடர்ந்து மனு வழங்கி, சீரமைப்பு பணி செய்து, சாக்கடை அமைக்க ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பணி செய்யாமல் நிறுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற்றும், அதிகாரிகள் தயங்குகின்றனர். அவ்விட ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் வெளியேற முறையான வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை