உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் வாஜ்பாய் பிறந்த தினவிழா கொண்டாட்டம்

சென்னிமலையில் வாஜ்பாய் பிறந்த தினவிழா கொண்டாட்டம்

சென்னிமலை, டிச.26-முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 101வது பிறந்த நாள் விழா 'நல்லாட்சி தினமாக' அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பாக, குமரன் சதுக்கத்தில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகி ஞானவேல் மற்றும் பலர் பங்கேற்றனர். * நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் வைக்கப்பட்டிருந்த, வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு பா.ஜ., நம்பியூர் தெற்கு ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில், மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தனர். பேரூராட்சி மன்ற உறுப்பினர் கந்தசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !