உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்

சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு, வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது. யூனிஷ்கான், 28, வேனை ஓட்டினார். அவருடன் வேன் உரிமையாளர் ஜபர்கான், 52, வந்தார். திம்பம் மலைப்பாதை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும், சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !