வி.சி., கொடிக்கம்பம் அகற்றத்தால் பரபரப்பு
வி.சி., கொடிக்கம்பம்அகற்றத்தால் பரபரப்புஈரோடு, நவ. 10-ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு புது மஜித் வீதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பமும், புகைப்படத்துடன் பெயர்கள் அடங்கிய இரும்பு தட்டியும் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாத நிலையில், இரும்பு தட்டியை அகற்றுமாறு புகார் சென்றதால், டவுன் இன்ஸ்பெக்டர் கோமதி உத்தரவின்படி நேற்று அதிகாலை அகற்றப்பட்டது. இதையறிந்த அக்கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையிலான நிர்வாகிகள், மீண்டும் இரும்பு தட்டியை நட்டு வைத்தனர். இதையடுத்து டவுன் கிரைம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனுமதி கடிதத்தை விரைவாக பெற்று தருவதாக கூறிய நிலையில், விரைவாக கடிதத்தை கொடுக்க வலியுறுத்தி சென்றார். இதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.