மேலும் செய்திகள்
பறவைகளின்றி வெறிச்சோடிய வேடந்தாங்கல் சரணாலயம்
14-Sep-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில், 77.85 ஹெக்டேர் பரப்பில் பறவைகள் சரணாலயம், 1996ல் நிறுவப்பட்டது. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட, 16 பறவைகள் சரணாலயத்தில் இதுவும் ஒன்று. சரணாலயத்தின் நடுவில், 50 ஏக்கரில் ஏரி உள்ளது. ஆண்டு-தோறும் பருவமழை தொடக்கம் முதலே ஏராளமான பறவைகள் இங்கு வருவது வழக்கம்.அதாவது அக்., முதல் பிப்., வரை இந்திய பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு இனங்க-ளுடன், 109 வகையான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இவை ஏறத்தாழ ஐந்து மாதங்கள் வரை தங்கி இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளுடன் பூர்வீக இடத்துக்கு திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.பறவைகளின் நலன் கருதி, இடையூறு ஏற்படாதவாறு சரணால-யத்தை சுற்றியுள்ள, பி.மேட்டுப்பாளையம், தலையன்காட்டு வலசு, செம்மாம்பாளையம் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்-களில், தீபாவளி பண்டிக்கையின் போது பட்டாசு வெடிப்பதை, மக்கள் தவிர்த்து வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: முதலில் பறவைகள் வருதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. நாளடைவில் இனப்-பெருக்கத்துக்காக வருவதும், நான்கு மாதம் தங்குவதும் தெரிந்-தது. பறவைகள் வரும் போது பட்டாசு வெடித்து அதிர்ச்சி ஏற்ப-டுத்தினால் இனப்பெருக்கம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே அவற்றை அதிர்ச்சியடைய செய்யக்கூடாது. பாதுகாக்க முடிவு செய்தோம். அதன்படி கடந்த, 19 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விட்டோம். இருப்பினும் குழந்தைகள் விருப்பத்துக்காக சத்தமில்லாத சிறிய வகை பட்டாசு மட்டும் வாங்கி கொடுப்போம். இந்த நடைமுறையை எங்களது வாரிசுகளும் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினர்.
14-Sep-2025