உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை :குளித்தலை அடுத்த. கூடலுார் பஞ்., பேரூரில் அமைந்துள்ள வில்வ விநாயகர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு,கடந்த 4ம் தேதி காலை குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புனிதநீரை கொண்டு வந்தனர். புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாகசாலையில் வைத்தனர். தொடர்ந்து மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.நேற்று காலை கோமாதா பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது, தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர் அடங்கிய கும்பத்தினை கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின் தீபாராதனை காட்டப்பட்டது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிக்குமார், முன்னாள் பஞ்., தலைவர்கள் கழுகூர் முத்து சாமி, கூடலுார் அடைக்கலம். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி