உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆயுதபூஜையால் குவிந்த கழிவு

ஆயுதபூஜையால் குவிந்த கழிவு

ஈரோடு: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையால் ஈரோடு மாநகரில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகளை சுத்தம் செய்து, செய்து, தேவையற்ற பொருட்களை அகற்றி, கழிவு பொருட்களை சாலையோரங்களில் கொட்டியிருந்-தனர். அதேசமயம் ஆயுதபூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள், விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணி, மா இலையை போட்டு சென்றுள்ளனர். இதனால் பல இடங்களில் மலைபோல் கழிவு குவிந்துள்ளது. இவற்றை மாநக-ராட்சி துாய்மை பணியாளர்கள் இன்று முதல் அகற்றுவார்கள் எனத் தெரிகிறது. அதேசமயம் சாலைகளில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயை, பல இடங்களில் நேற்று முன்தினம் இரவே, துாய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்ததாக, மாந-கராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை