உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் திறக்கப்படும் நீரால், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல் போக பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர் குமார் மற்றும் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க விவசாயிகள் அடங்கிய குழு, நேற்று காலை தலைமதகின் ஷட்டரை இயக்கி பாசத்துக்கு தண்ணீர் திறந்தனர்.தடப்பள்ளி வாய்க்காலில், 200 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 100 கன அடி திறக்கப்பட்டது. வரும் நாட்களில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர் வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி