மாநகராட்சி பகுதியில்இன்று குடிநீர் கட்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு, ஊராட்சிகோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று (7 ல்) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, இன்று அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் போதுமான அளவு வழங்க இயலாத நிலை உள்ளது.பராமரிப்பு பணி முடிவுற்ற பின், குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.