மேலும் செய்திகள்
இனி, வசந்த காலம்! தொழில்துறையினர் நம்பிக்கை
02-Jan-2025
திருப்பூர்: மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷாமிராவ், நேற்று திருப்பூ-ருக்கு வந்தார். ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்-சியில், பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்-துரையாடி, எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) சார்பில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: பின்ன-லாடை, விசைத்தறி என ஜவுளி உற்பத்தி துறைக்கு, பஞ்சு மிக முக்கியமான மூலப்பொருளாக உள்ளது. சீரற்ற பஞ்சு விலையால், நுால் விலையிலும் திடீர் உயர்வு ஏற்பட்டு, ஜவுளி உற்பத்தி துறையை பாதிக்கச் செய்கிறது. மத்திய அரசு, பஞ்சு மற்றும் நுால் விலையை சீர்படுத்தவேண்டும். வரிச்சலுகைகள் காரணமாக, வங்கதேச நிறுவனங்கள், குறைந்த விலைக்கு ஆயத்த ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன. நமது நாட்டு சந்-தையில் வங்கதேச ஆடைகள் இறக்குமதியாவதால், உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி துறையினருக்கு பெரும் வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. வங்கதேச ஆடைகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து, இந்திய ஆடை உற்பத்தி துறையினரை பாதுகாக்க-வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
02-Jan-2025