மேலும் செய்திகள்
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
20-Mar-2025
சென்னிமலை: பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு பணியாளர் சங்கத்தின், மாநில நிர்வாக குழு கூட்டம், ஈரோட்டை அடுத்த லட்சுமி நகரில் நடந்தது. மாநில தலைவர் நடன சபாபதி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட தலைவர் சென்னிமலை தன்ராஜ் வரவேற்றார்.கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, திருச்செங்கோடு, திருவண்ணாமலை, வேலுார், கடலுார், கரூர், விருதுநகர், பரமக்-குடி, திண்டுக்கல் கைத்தறி சரக மாநில மற்றும் மாவட்ட நிர்வா-கிகள் கலந்து கொண்டனர். கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கைத்தறி சங்கங்களுக்கு தள்ளுபடி மானிய உச்சவரப்பை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் சவுண்டையப்பன், மாநில கூட்டமைப்புக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் சேலம் விஜயசந்திரன், திருப்பூர் வடிவேல் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். மாநில அமைப்பு செய-லாளர் கண்ணன், மாநில துணை தலைவர் வேலுமணி, மாநில துணை செயலாளர் ஆறுமுகம் பேசினர்.
20-Mar-2025