உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிபில் ஸ்கோர் முறை ரத்துக்கு வரவேற்பு

சிபில் ஸ்கோர் முறை ரத்துக்கு வரவேற்பு

திருப்பூர், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என்ற அறிவிப்பு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறியதாவது:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிபில் ஸ்கோர் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.இருப்பினும், சில கூட்டுறவு சொசைட்டிகள், அறிவிப்பு வெளியான பின்னரும், பயிர் கடன் வழங்க மறுத்து வருகின்றன. சிபில் ஸ்கோர் நடைமுறை நீக்கிய பின்னும், பயிர் கடன் வழங்காதது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் கூட்டுறவு சொசைட்டிகளில் பயிர் கடன் வழங்க மறுக்கப்பட்டால், விவசாயிகளை திரட்டி அந்த வங்கியை முற்றுகை இடுவோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை