உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற ஆய்வாளர் பணிக்கு வரவேற்பு

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற ஆய்வாளர் பணிக்கு வரவேற்பு

ஈரோடு, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு, 'புனித பயணம் மேற்கொள்ள உள்ள தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை' தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.தற்காலிக பணிக்காலமாக, 2026 ஏப்., 13 முதல் ஜூலை, 5 வரை, 2 மாத காலமாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவ படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்கலாம்.மாநில ஹஜ் ஆய்வாளர்கள், சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகர்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியவை இந்திய ஹஜ் குழு இணைய முகவரி, www.hajcommitte.gov.inல் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி