வெல்டிங் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
பெருந்துறை:கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனன், 43; கோழிப்பண்ணையில் கோழிக்கூண்டு தயாரிப்புக்கான வெல்டிங் தொழில் செய்தார்.பெருந்துறையை அடுத்த சின்னமல்லம்பாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் நேற்று முன்தினம் வேலையில் ஈடுபட்டிருந்தார். பிளக் பாயிண்டில் மின்சாரம் தடைபட்ட நிலையில் அதை பரிசோதித்து பார்த்த நிலையில் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.