947 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஈரோடு: சென்னையில் நடந்த அரசு விழாவில், துாய்மை பணியாளர்-களை தொழில் முனைவோராக்க நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதன் காணொலி காட்சி பல்-வேறு மாவட்டங்களில் நேரலை செய்து, அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்க, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், 947 பயனாளிகளுக்கு, 10.05 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி, தொழில் துவங்குவதற்கான உதவிகளை வீட்டு வசதித்-துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.நிகழ்வில் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.