ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்
பவானி: நசியனுார் டவுன் பஞ்., நான்காவது வார்டுக்கு உட்பட்ட, ஆய-மேடு முதல் தயிர்பாளையம் வரை, 2 கி.மீ., தொலைவுக்கு, நபார்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 15வது வார்டு பஞ்., நகரில் தார்ச்சாலை அமைக்கும் பணி என, 2 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி, பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், பேரூர் செய-லாளர் மோகன சுந்தரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.