மேலும் செய்திகள்
பள்ளத்தில் பாய்ந்த லாரி உயிர் தப்பிய டிரைவர்
30-Jul-2025
அந்தியூர், பர்கூர்மலை, துருசனாம்பாளையம் அருகே திக்கஜனுாரை சேர்ந்தவர் மாதேவன், 56, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சிவக்குமார். இருவரும் கடந்த, 25ம் தேதி, பர்கூரில் இருந்து பஜாஜ் பல்சர் பைக்கில் அந்தியூர் வந்தனர். பைக்கை சிவக்குமார் ஓட்டினார். வரட்டுப்பள்ளம் வியூ பாயிண்ட் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் காயமடைந்த இருவரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாதவன் நேற்று அதிகாலை இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Jul-2025