உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவனை கொன்ற மனைவி கைது

கணவனை கொன்ற மனைவி கைது

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்தில், ஒரு தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல், ௫௦, தலையில் ரத்த காயங்களுடன் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். தாளவாடி போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். கோபி அருகேயுள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், 50, என்பதும், தாளவாடியில் செங்கல் சூளை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இவரின் மனைவி மல்லன்குழியை சேர்ந்த ரேவதி, ௩௩; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார். ரேவதி வீட்டுக்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையேல் மகன்களை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று தகராறு செய்து தகாத வார்த்தை பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ரேவதி கல்லால் தாக்கியதில் தங்கவேல் பலியானது தெரிந்தது. தாளவாடி போலீசார் ரேவதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி